தலைமன்னார் கடற்பரப்பில் 5வது தீடை பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம்! (PHOTO)

Date:

தலைமன்னார் கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை கடல் றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின் 5வது தீடைப் பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை அடையாளம் காண்டுள்ளனர்.

குறித்த சடலம் தொடர்பாக கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

தலைமன்னார் பொலிஸார் குறித்த தீடைப்பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை பார்வையிட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலத்தை தலைமன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ரயிலுடன் மோதிய விசேட அதிரடிப்படை வாகனம்

மிதிகமவில் உள்ள ரயில் கடவையில், சிவப்பு நிற எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒளிரும்...

நெல்லியடியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 6...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்