கோவிட் தொற்றுநோயால் நாட்டில் பிரசவங்களின் எண்ணிக்கை விரைவாக குறைந்து வருவதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தொற்று ஏற்படுவது, உயிரிழப்பு போன்ற காரணங்களினால் பிரசவங்கள் குறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
கோவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பயணத் தடைகளைத் தொடர்ந்து திருமண விழாக்களிற்கு தடைவிதிக்கப்பட்டதே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“கோவிட் தொற்றுநோய் மற்றும் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட 750,000 திருமண விழாக்கள் நடக்கவில்லை. நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும்போது, இது எதிர்காலத்திற்கான பிரச்சினையாக இருக்கும்,” என்றார்.
இலங்கையில் ஒரு வருடத்தில் சுமார் 350,000 குழந்தை பிறக்கின்றன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் திருமணங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதால்,
குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 100,000 ஆகக் குறைந்துள்ளது என்று அமைச்சர் ஜெயகொடி கூறினார்.
“கொரோனா தொற்றுநோயால் சுமார் 3,600 பேர் இறந்துள்ளனர். ஆனால் சுமார் 350,000 பிறக்காத குழந்தைகள், பிறக்கம் வாய்ப்பை இழந்துவிட்டார்கள்.
திருமண விழாக்களை நடத்த அனுமதிக்கும்போது பயண கட்டுப்பாடுகளை தளர்த்துவது
குழந்தைகள் பிறப்பு பிரச்சனைக்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த முடிவு.
இந்த பிரச்சினையின் விளைவுகள் 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும்“ என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




