இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் 8.3 மில்லியன்!

Date:

இலங்கையில் கிட்டத்தட்ட 8.3 மில்லியன் வாகனங்கள் பாவனையில் உள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் அலகக்கோன், வாகனங்களின் அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றார்.

தற்போது கிட்டத்தட்ட 8.3 மில்லியன் வாகனங்கள் வீதிகளில் இயங்கி வருகின்றனன. இவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களே.

2010 இல் 3.95 மில்லியன் வாகனங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் இது 2020 டிசம்பருக்குள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 8.29 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

4.8 மில்லியன் மோட்டார் சைக்கிள்கள், 1.1 மில்லியன் முச்சக்கர வண்டிகள் மற்றும் 800,000 மோட்டார் கார்கள் கடந்த தசாப்தத்தில் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விபத்துக்கள் விரைவாக அதிகரிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ​​வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை, விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக கூற முடியாது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...

4வது மாடியில் சுரேஷ் சாலேயின் காற்சட்டை கழற்றப்பட்டதா?: அந்த ‘அருவருப்பான’ சம்பவம் எது?

முன்னாள் எஸ்.ஐ.எஸ். இயக்குனர் சுரேஷ் சாலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை மனநல...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்