சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகமான 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் பிரிவு 33 (இ) சட்டத் தொழிலில் சிறந்து விளங்கிய மற்றும் நேர்மையான மற்றும் அவர்களின் தொழிலில் சிறந்து விளங்கும் சட்டத்தரணிகளை ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
அதன்படி, மேலதிக மன்றாடியார் நாயங்கள் மிலிந்த குணதிலக, ஹரிப்ரிய ஜெயசுந்தர, விகும் அப்ரூ, ஷானக விஜேசிங்க, ரவீந்திர பத்திரனகே, நெரின் புள்ளே மற்றும் சேத்திய குணசேகர ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.




