தென்மராட்சி, மீசாலை பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மீசாலை, ஐயா கடை சந்தியில் உள்ள அழகு சாதன பொருள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்த ரௌடிக்குழு, உரிமையாளரான இளைஞரை சரமாரியாக வெட்டித்தள்ளியது.
கால், கை, தலையில் வெட்டுக்காயங்களிற்குள்ளான இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1