26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

இரண்டு முகக்கவசம் அணிய வேண்டுமா?: சுகாதார அமைச்சு விளக்கம்!

ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் (surgical masks) அல்லது இரண்டு K95 முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துதாவ, சரியாக அணிந்தால் ஒரு முகக்கவசம் கூட போதுமானது என்று கூறினார்.

ஒரு முகக்கவசம் போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை என்று ஒரு நபர் உணர்ந்தால், அத்தகைய சந்தர்ப்பங்களில், K95 அல்லது ஒரு சத்திர சிகிச்சை முகக்கவசத்திற்கு மேலதிகமாக ஒரு துணி முகக்கவசத்தை பயன்படுத்தலாம் என்று  கூறினார்.

எனினும், துணி முகமூடியை K95 அல்லது சத்திர சிகிச்சை முகக்கவசத்திற்கு மேல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்

east tamil

Leave a Comment