பூசா சிறைச்சாலையில் உள்ள மேலும் 33 கைதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிற்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்கள் சிகிச்சைக்காக மாத்தறை, வதரேக மற்றும் அங்குனகொலபெலெச சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.




