கொழும்பிலிருந்து பயணிகளுடன் யாழ்ப்பாணம் வந்த வாகனம் விபத்து!

Date:

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் நள்ளிரவு விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த விபத்தினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்ட நிலையில் தெய்வாதீனமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த வான் வணக்கத்திற்காக முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

வானின் சாரதி ஆலயத்திற்கு சென்றிருந்த நிலையில், வாகனத்தில் சிலர் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஏ 9 வீதியில் பயணித்து பால கட்டுமான பணிக்காக கொங்கிறிற் தூண் ஏற்றி சென்ற கனரக வாகனம் மோதியுள்ளது.

சம்பவத்தில் வான் பலத்த சேதங்களிற்கு உள்ளான போதிலும் வானில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டனர்.

சம்பவம் இடம்பெற்றதை அடுத்து குறித்த கனரக வாகனம் வீதிக்கு குறுக்கே நின்றமையால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...

இனி இந்த 8 விடயங்களை செய்ய TIN இலக்கம் அவசியம்!

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, 2026 நவம்பர் 1-ஆம் திகதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்