“வீட்டை விட்டு ஓடிப்போகும் ஜோடிகளுக்கு இங்கு திருமணம் செய்து தரப்படும்”: கல்லா கட்டும் பலே கில்லாடி!

Date:

வீட்டை விட்டு ஓடிப்போகும் ஜோடிகளிற்கு திருமணம் செய்து வைக்கும் வர்த்தகத்தை ஆராம்பித்த கில்லாடியொருவர், கல்லா கட்டி வருகிறார்.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் இந்த வர்த்தக நிலையம் அமைந்துள்ளது.

காதல் ஒன்று அமைவது எவ்வளவு சிரமமோ, அதைவிட சிரமமானது பெற்றோர் சம்மதம்.

நடிகர் விஜய் நடித்த ஷார்ஜகான் திரைப்படத்தில் இப்படி வீட்டாரின் சம்மதம் இல்லாத காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பார். இதைபோல, ஹரியானா மாநிலத்தில் இப்படியாக ஓடிப்போக விரும்பும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கவே தற்போது ஒருவர் கடைய ஒன்றை போட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் பஞ்குலா பகுதியில் மாதா மானசா தேவி கோவில் செல்லும் சாலையில் இந்த கடை அமைந்துள்ளது. இந்த கடையில் சென்று காதல் ஜோடிகள் திருமணம் செய்ய வேண்டும் என அவர்களின் விருப்பத்தை சொன்னால் அவர்களுக்கான, திருமண ஆடை, தாலி, போட்டோகிராப், திருமணப்பதிவு, வக்கீல் செலவு என அனைத்தும் செய்து தரப்படுகிறது.

ரூ.5000 முதல் ரூ.16 ஆயிரம் வரை தம்பதிகளில் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கேஜ்கள் இருக்கிறது. இவை அனைத்தும் 2 நாளில் ஏற்பாடு செய்யப்படும். இந்த கடையின் மூலம் தற்போது 70-80 திருமணங்கள் மாதத்திற்கு நடக்கிறது. இங்கு திருமணம் செய்பவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தால் கோர்ட்டில் ஆஜராகி இவர்களுக்கு பாதுகாப்பு பெற்று தருவது வரை இந்த கடைக்காரர்கள் உதவுகிறார்களாம்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்