ஹபரண பிரதான வீதியில் கோளாறு காரணமாக நடுவீதியில் நின்ற ஹன்டர் வாகனமொன்றை காட்டு யானை, பின்பக்கத்திலிருந்து தள்ளி இயங்க வைத்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அண்மையில் கந்தளாயிலிருந்து, தம்புள்ளைக்கு மரக்கறி ஏற்றச் சென்ற ஹன்டர் வாகனமொன்று, ஹபரண பகுதியில் நடு வீதியில் செயலிழந்து நின்று விட்டது. சாரதி அதனை இயக்க முயன்றார். முடியவில்லை.
இதனை, அந்த வீதி வழியாக வந்த இளைஞன் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியுள்ளார். அது வைரலாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1