வித்தியாசமாக உருவாகியுள்ள ‘வாழ்’.. டிரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

Date:

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாழ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள திரைப்படம் ‘வாழ்‘. வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகியுள்ள இப்படத்தில் அருவி படத்தின் உதவி இயக்குனர் பிரதீப் கதாநாயகனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து இப்படம் கொரானாவால் தற்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட இப்படம் தற்போதுதான் வெளியாக உள்ளது. திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்ப்பட்ட இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படம் சோனி லைவ்வில் வரும் ஜூலை 16 வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ‘வாழ்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதோடு இந்த படத்தின் முழு ஆடியோவையை அவர் வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக உள்ள ‘வாழ்’ படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்