Pagetamil
இலங்கை

மன்னாரில் ஆர்வமாக பைசரை செலுத்தும் மக்கள்!

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) காலை தொடக்கம் பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 3 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த கிராமங்களை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

தலைமன்னார், பேசாலை, மன்னார், வங்காலை, முத்தரிப்புத்துறை மற்றும் மடு பகுதியை சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) 3வதுடிநாளாக மன்னார் பகுதியை சேர்ந்தவர்களுக்கு மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளில் பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெற்று வருகின்றது.

நாளை (12) திங்கட்கிழமையும் குறித்த பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெறும். இந்த நிலையில் மக்கள் ஆர்வத்துடன் குறித்த தடுப்பூசியை பெற்றுச் செல்கின்றனர்.

மன்னார் மாவட்டத்திற்கு என சுமார் 20 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி உட்பட சுகாதார துறையினர் மற்றும் இராணுவம் , வான்படை அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை பெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருடிய இடங்களில் “BATMAN” என எழுதி வைத்த திருடன் சிக்கியது எப்படி?

Pagetamil

இள வயது பெண்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு: சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

east tamil

ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது

east tamil

வவுனியாவில் ஒருவர் கொலை

Pagetamil

TikTok ஊடாக காதலித்த காதலியை தேடி வந்த இளைஞர்: பொலிஸாரால் கைது

east tamil

Leave a Comment