நீராவியடிப் பிள்ளையாரின் வருடாந்த பொங்கலிற்கு 10 பேருக்கே அனுமதி!

Date:

முல்லைத்தீவு – செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த பொங்கல் விழாவுக்கு, இம்முறை 10 பேர் மாத்திரமே கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதியன்று, நீராவியடிப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தற்போதைய கொரோனா அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு, குறித்த பொங்கல் விழாவில், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, 10 பேர் மாத்திரம் கலந்துகொள்வதற்கு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் அனுமதியளித்துள்ளது.

அதாவது, நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, சுகாதார மற்றும் சுதேச வைத்தியசேவைகள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, 10 பேரை மட்டும் உள்ளடக்கியதாக கோவில் கிரியைகளை எளிமையான முறையில், சமூக சுகாதார இடைவெளிகளைப் பின்பற்றி, 12ஆம் திகதி மாலை தொடக்கம் 13ஆம் திகதி மாலை வரை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்துக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு- யாழ் இரயிலில் அதிகவிலையில் குடிநீர் போத்தல் விற்பனை

குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் போத்தல் குடிநீர் விற்கப்படுவதைக்...

போலிப்படத்தை பரப்பாதீர்கள்

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), தங்களைக் குறிவைத்து சமூக ஊடகங்கள்...

நவாலி தேவாலய படுகொலை நினைவு

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்