உரோம் மருத்துவமனையில் இருக்கும் போப் பிரான்சிஸிற்கு காய்ச்சல் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் கெமல்லி என்ற மருத்துவமனையில் கடந்த 4ஆம் திகதி அன்று போப் பிரான்சிஸிற்கு குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்பு கடந்த 7ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.
தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் நலமும் தேறி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையின் அறைக்கு வெளியில் நடைபயிற்சி செய்கிறார். மேலும் மருத்துவமனையிலேயே பிரார்த்தனை நடத்தியிருக்கிறார். இதனையடுத்து நாளை ஞாயிறு வழிபாட்டை மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1