28.4 C
Jaffna
March 9, 2025
Pagetamil
உலகம்

மனைவியுடன் திட்டமிட்ட ஹனிமூனிற்கு காதலியுடன் சென்ற கணவன்!

திருமணம் முடிந்த பின்பு தான் ஒரு மனிதனின் வாழ்வில் இரண்டாம் பாதியே துவங்குகிறது. இங்கு அவன் தனக்காக மட்டுமல்லாமல் தன் மனைவிக்காகவும், தன் குழந்தைகளுக்காகவும் வாழ வேண்டும். அவர்களின் சந்தோஷம் இவரிடம் தான் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் சந்தோஷமான திருமண வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. பலர் திருமணத்திற்கு விவகாரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். இப்படியான ஒரு சம்பவத்தை தான் பார்க்கப்போகிறோம்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி டிம் – கேத்ரீன், இவர்கள் இருவரும் எதிர்காலத்தை திட்டமிட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தனர். திருமணத்திற்கு முன்பே தன் எதிர்காலத்திற்கு பணம் சேமிக்க வேண்டும் என கருதி இவர்கள் திருமணத்தையும் சிம்பிளாக வைத்துக்கொண்டனர். திருமணத்திற்கு பின்பும் ஹனிமூன் என எங்கேயுமே செல்லவில்லை. இவரும் உழைத்து பணம் சேமித்து வீடு வாங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு உழைத்தனர். இந்நிலையில் 5 ஆண்டுகளில் அவர்கள் வீட்டை வாங்கிவிட்டனர். இதையடுத்து அவர்கள் இனி நிம்மதியான வாழ்வை வாழ வேண்டும் என முடிவு செய்து எங்காவது ஹனிமூன் செல்லலாம் என முடிவு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் ஒரு மாதம் வேலைக்கு லீவு போட்டு விட்டு ஹனிமூன் செல்ல முடிவு செய்து இடங்களை தேர்வு செய்து அங்கு தங்குவது, சுற்றிபார்ப்பது என பல திட்டங்களை வகுத்தனர். இருவரும் இதை செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் கேத்ரீனிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீடு திரும்பும் போது டிம் வீட்டில் இல்லை. அவருக்கு பதிலாக டீம், கேத்ரீனிடம் விவாகரத்து கோரும் பேப்பர்களும் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கேத்ரீன், டிம் இடம் இது குறித்து கேட்ட போது

இவர்கள் உறவில் காதல் இல்லை என அவரது தரப்பிலிருந்து பதில் வந்தது. இந்நிலையில் டிம் முன் வேறு ஒரு பெண்ணும் டேட்டிங் செய்து வருவதாக கேத்ரீனிற்கு தகவல் கிடைத்தது. இது குறித்து கேட்ட அவர் டிம்மை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் போனை எடுக்கவில்லை, அந்த பெண்ணிடம் பேசலாம் என அவரது அலுவலகத்திற்கு சென்ற போது அந்த பெண் லீவில் இருப்பது தெரியவந்தது. அதன் பின் நடத்திய விசாரணையில்தான், டிம்மும் அவருடைய புதிய காதலியும், கேத்ரீன் மற்றும் டீம் சேர்ந்து போட்ட ஹனிமூன் ட்ரிப்பிற்கு ஒன்றாக சென்றது தெரியவந்தது.

அதன்பின் அவர்களின் இன்ஸ்டாகிராமை பார்த்த போது தான் அது உண்மை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதை கேத்ரீன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அதன் பின் தான் இந்த கதையே வெளியே வந்தது. இந்த 2 ஆண்டுகள் கேத்ரீன் மனது ஓடிந்த நிலையில் காணப்பட்டார். அவரை டாக்டரிடம் காண்பித்து கவுன்சிலிங் கொடுத்த பின்பு தற்போது தான் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!