பிரபல நடிகர் உடல்நலக்குறைவால் மரணம்: சோகத்தில் திரையுலகினர்!

Date:

பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான ராம்கி எனும் ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். மூத்த நடிகரான இவர் சுமார் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பல டிவி தொடர்களில் நடித்துள்ளவர் ராம்கி. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சுமார் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர் மற்றும் சினிமா படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார் ராம்கி. மேலும் ஒருசில நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் தன்னுடைய முத்திரையும் பதித்துள்ளார் ராம்கி.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராம்கி நேற்று மாலை உயிரிழந்தார். அவரின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்கியின் மறைவிற்கு மேடை நாடக கலைஞர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்