தனிமைப்படுத்தப்பட்டுள்ள கினிகத்தேனை கடவளை தோட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பாக போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த இளைஞனை 15 அடி உயரமான இடத்திலிருந்து கீழே தள்ளிவிட்டதால் முதுகுப்பகுதியில் இடதுகையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் சம்பவத்தன்று நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசிசையளிக்கப்பட்டார். சிகிச்சையின் பின்னர் அவர் வீடு திரும்பியிருந்தார். எனினும், தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் நேற்று மீண்டும் கினிகத்தேனை வைத்தியசாலை ஊடாக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் தொழிற்சங்க தலைவரும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.