கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 218 போத்தல் கோடாவும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றை கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு பொலிசார்கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1