26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
கிழக்கு

முதலீட்டாளர்களிற்கு அமைச்சர் வியாழேந்திரன் விடுத்துள்ள அழைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் புன்னக்குடா பகுதில் 260 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் (ஏற்றுமதி வலயம்) பொருளாதார அபிவிருத்தி வலயத்துக்கு புதிய முதலீட்டாளர்களுக்கு பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அழைப்பு விடுக்கப்பட்டுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற வேலைவாய்ப்பு பிரச்சிணைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் மட்டகளப்பு மாவட்டத்தின் ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் 260 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் பொருளாதார அபிவிருத்தி வலயத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கைத்தொழில் நிறுவனங்களை ஆரம்பிப்பதனூடாக மட்டகளப்பு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாயப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

இதனூடாக மட்டகளப்பு மாவட்டத்தின் வேலைவாய்ப்பு பிரச்சிணைக்கு ஒரளவேனும் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என நேற்று (08.) கம்பஹா மாவட்டத்தின் மீரிகம சுதந்திர பொருளாதார வலயத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஓட்ஸ் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் கைத்தொழில் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் உணவு உற்பத்தி செயற்பாடுகள் குறித்து பார்வையிட்டு நிறுவனத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்த ஓட்ஸ் உணவு பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கொண்டு பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சினூடாக நடைமுறைப்படுத்தும் விவசாயம் சார்ந்த உற்பத்திகளை அதிகரிப்பதற்கு கிழக்கில் இரசாயனபதார்தமற்ற சேதன பசளை தயாரிப்பதற்கு அகற்றப்படும் கழிவுகளை பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்படடது.

இக்கலந்துரையாடலில் பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹரிசத டி சில்வா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

east tamil

சேனநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகள் 6 அங்குலம் திறப்பு

east tamil

Team 16ன் தன்னலமற்ற சேவை

east tamil

உப்புவெளியில் போக்குவரத்து தடை

east tamil

மூதூர் கோட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தில் குகதாசனின் கோரிக்கைகள்

east tamil

Leave a Comment