நவாலிப் படுகொலை: சிவாஜி, அனந்தி அஞ்சலி!

Date:

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மலரஞ்சலி செலுத்தி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், தேவாலய வளாகத்தினுள் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நட்சத்திர விடுதியில் காஸ்யப்ப தேரரும், வீரசேகரவும்!

விஹாரமஹாதேவி பூங்காவில் சத்யாகிரகம் நடத்திய பாலங்கொட கஸ்ஸப தேரர், நேற்று முன்தினம்...

லங்கா ஐ.ஓ.சி பெற்றோல் விலையை அதிகரித்தது!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி 95 ஒக்டேன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்