சூம் தொழில்நுட்பத்தை வழங்கும் போர்வையில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆசாமி கைது!

Date:

பாடசாலை மாணவிகளை இணையம் வழியாக பாலியல் சுரண்டலிற்கு உட்படுத்திய  28 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிட்டபெத்தரவில் உள்ள ஒரு பாடசாலையின் முதல்வர், அப்பகுதியைச் சேர்ந்த பல பாடசாலை மாணவிகள் இணையம் வழியாக பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டதாக முறையிட்டதையடுத்து, பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மாத்தறை பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் விசாரணையில் சந்தேக நபர் இலங்கையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இணைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் அதிகாரியென்பது தெரிய வந்தது. சந்தேகநபர், 2 ஆண்டு சேவையை முடித்துள்ளார் என்பது தெரியவந்தது.

சந்தேகநபர், ஒன்லைன் சூம் தொழில்நுட்பத்தை வழங்கும் போர்வையில் பல  மாணவிகளின் தொலைபேசி எண்களை பெற்றுள்ளார்.

தொலைபேசி எண்களைபெற்ற பின்னர், மாணவிகளை இணையம் மூலம் பாலியல் ரீதியாக சுரண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பல மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களையும் பெற்றுள்ளார்.

தம்புத்தேகமவில் வசிக்கும் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று மொரவக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

இந்த சம்பவம் பொலிசார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் வெளியான சுரேஸ் சல்லேவின் மருத்துவ அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு; 15 பேர் குற்றவாளிகள்: 9 பேர் விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக்...

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்