பாடசாலை மாணவிகளை இணையம் வழியாக பாலியல் சுரண்டலிற்கு உட்படுத்திய 28 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிட்டபெத்தரவில் உள்ள ஒரு பாடசாலையின் முதல்வர், அப்பகுதியைச் சேர்ந்த பல பாடசாலை மாணவிகள் இணையம் வழியாக பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டதாக முறையிட்டதையடுத்து, பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மாத்தறை பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் விசாரணையில் சந்தேக நபர் இலங்கையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இணைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் அதிகாரியென்பது தெரிய வந்தது. சந்தேகநபர், 2 ஆண்டு சேவையை முடித்துள்ளார் என்பது தெரியவந்தது.
சந்தேகநபர், ஒன்லைன் சூம் தொழில்நுட்பத்தை வழங்கும் போர்வையில் பல மாணவிகளின் தொலைபேசி எண்களை பெற்றுள்ளார்.
தொலைபேசி எண்களைபெற்ற பின்னர், மாணவிகளை இணையம் மூலம் பாலியல் ரீதியாக சுரண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பல மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களையும் பெற்றுள்ளார்.
தம்புத்தேகமவில் வசிக்கும் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று மொரவக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
இந்த சம்பவம் பொலிசார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.