‘தல’ தோனிக்கு இன்று பிறந்தநாள்: உழைப்பால் உயர்ந்த சாதனை மனிதன்!

Date:

ஒரு நபருக்கு இத்தனை அடைமொழிகள் சாத்தியமா? என்றால் அது தோனிக்கு மட்டுமே பொருந்தும். தல தோனி, மிஸ்டர் கூல், கேப்டன் கூல், மஹி, கிங் மேக்கர், எங்க தல தோனி, ஃபெஸ்ட் ஃபினிஷர், என கிரிக்கெட் ரசிகர்களால் ஏகப்பட்ட செல்லப்பெயர்களுடன் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 40 ஆவது பிறந்தநாள்.

1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி, ராஞ்சியில் பிறந்து, கிரிக்கெட் கனவுகளைச் சுமந்து, டிடிஆராக பணிபுரிந்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இந்திய கிர்க்கெட் அணிக்கே கேப்டனாக மாறி தோனியை ரசிகர்கள் எந்த நேரத்திலும் கொண்டாடத் தவறியதில்லை. வெற்றி, தோல்வி இரண்டிலும் அவரின் பக்கம் நின்ற அதே ரசிகர்கள் தான் இன்று அவரின் பிறந்த நாளையும் சமூகவலைத்தளங்களில் அதகளப்படுத்தி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதில் தொடங்கி, சக வீரர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கி அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து, தோல்வியின்போது அணிக்கு முன்னால் நின்று, வெற்றியின் போது அணிக்குப் பின்னால் நின்று ஒட்டுமொத்த கிர்க்கெட் ரசிகர்களின் இதயத்திலும் தனி ஒருவனாக நிற்கும் தோனி எப்போதுமே எல்லோருக்குமே ஸ்பெஷல்தான்.

200 ஒருநாள், 60 டெஸ்ட், 72 டி20 போட்டிகள் என மொத்தம் 332 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு தோனி கேப்டனாக இருந்துள்ளார். இவருக்கு அடுப்படியாக ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (324) இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தலைமையில் இந்திய அணி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது. இதுவரை வேறு எந்த கேப்டனும் செய்யாத சாதனை அது. 2007-ல் டி20 உலகக் கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை தோனி தலைமையிலான இந்திய அணிக் கைப்பற்றியுள்ளது.

இப்படி வரலாற்று சாதனைகளைப் படைத்திருக்கும் தோனிக்கு, ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இன்று, நேற்று இல்லை, கடந்த வாரத்திலிருந்தே தோனிக்கு காமன் டிபி வெளியிடுவது, வாழ்த்துகளை தெரிவிப்பது என ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகிறார்கள்.

மகேந்திரசிங் தோனி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மட்டுமே வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்