ஜூலை 1 ஆம் திகதி பொரலந்த, பொகஹகும்புரவில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக ஜேவிபி கட்சியின் சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை பொகஹகும்புர பொலிஸ் நிலையத்தில்அவர்கள் சரணடைந்தபோது ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் வெலிமட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் மூத்த டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.



