யாழ்ப்பாணத்தில் சில பகுதிகள் சீனாவுக்கு விற்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கூறியது பொய்யான தகவல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நெடுந்தீவில் 40 ஏக்கர் நிலமும், ஒல்லாந்தர் கால கட்டிடமான பழைய யாழ்ப்பாண கச்சேரியும் சீனாவுக்கு விற்கப்பட இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அண்மையில் சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார்.
அண்மையில் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்ததும் இந்த நோக்கத்திற்காகவே என தெரிவித்திருந்தார்.
இருப்பினும், பிரதமரின் அலுவலகம் இதனை மறுத்துள்ளது.
“கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியமை தொடர்பில் ஆராய்ந்ததில் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், நெடுந்தீவு அல்லது பழைய யாழ்ப்பாணம் கச்சேரி கட்டிடத்தில் எந்த நிலத்தையும் எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்க எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அதிகாரிகளால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது, ”என்று பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் காசிலிங்கம் கீதநாத் ட்வீட் செய்துள்ளார்.
After inquiring into the allegations made by @TNAmediaoffice MP. Hon. Sritharan, I was informed by authorities that these allegations are absolutely FALSE and there are no moves to sell any land on the Delft Island or the old Jaffna Kachcheri building to any foreign company. #lka https://t.co/ny8R2pEC9U
— G. Cassilingham (@CassilingamG) July 6, 2021




