கிளிநொச்சி மாவட்டத்தில் 6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பபூசி
செலுத்தும் பணிகள் நேற்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் (06) கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில்
தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்து.
இதேவேளை நேற்றைய தினம் (05) இணைமடு சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள
இராணுவ வைத்தியசாலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி
செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அழைத்து வரப்பட்டு
அவர்களிற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




