கொரோனா வைரசுக்கு சிகிச்சை முறை கண்டுபிடிப்பு-எலிகளிடம் வெற்றிகரமாக பரிசோதனை!

Date:

கொரோனா பாதித்த எலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை அளித்தபோது அதன் இறப்புகள் குறைவதுடன், நுரையீரல் தொற்று குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக பல தடுப்பூசிகள் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

குறிப்பாக தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை அளித்தால் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் தேசிய அறிவியல் அகாடமி நடவடிக்கைகள் மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.

அந்தவகையில் கொரோனா பாதித்த எலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை அளித்தபோது அதன் இறப்புகள் குறைவதுடன், நுரையீரல் தொற்று குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

வைரஸ் தடுப்பு மருந்துகளின் ஒரு வகையான இந்த புரோட்டீஸ் தடுப்பான்களால், வைரஸ்களின் இனப்பெருக்கம் தடுப்பதுடன், வைரஸ் உற்பத்திக்கு தேவையான புரதங்களை செயல்படுத்துவதையும தடுக்கப்படுகிறது.

இது குறித்து கன்சாஸ் பல்கலைக்கழக இணை பேராசிரியரான யுன்ஜியோங் கிம் கூறுகையில், ‘பூனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்காக நாங்கள் இந்த புரோட்டீஸ் தடுப்பான்களை ஜிசி376 நாங்கள் உருவாக்கினோம். தற்போது அது விலங்குகளுக்கான மருந்தாக வர்த்தக ரீதியான தயாரிப்பில் உள்ளது’ என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவ தொடங்கிய பிறகு, இந்த வைரசுக்கு எதிராக இந்த தடுப்பானும் பயனுள்ளதாக இருப்பதாக பல ஆராய்ச்சி குழுக்கள் தெரிவித்ததாக கூறிய கிம், தற்போது பலரும் இதை ஒரு சிகிச்சையாக தொடர்வதாகவும் தெரிவித்தார்.

இந்த புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் ஜிசி376-ஐ டியூட்டிரேசன் மூலம் மாற்றியமைக்கும்போது, அது கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

தொற்று பாதித்த எலிக்கு 24 மணி நேரத்துக்கு பின் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது, சிகிச்சை பெறாத எலிகளை விட சிகிச்சை பெற்ற எலிகளிடம் இறப்பு விகிதம் மிகவும் குறைவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மேம்பட்ட தடுப்பான்களை வைரஸ் சிகிச்சை நிபுணர்கள் உருவாக்கி வருகின்றனர். இதில் மேற்படி சிகிச்சை முறை மேலும் சாத்தியமான மேம்பாட்டுக்காக மதிப்பீடு செய்யப்படுகிறது.

எலிகளிடம் இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இது கொரோனா சிகிச்சை முறையில் முக்கிய திருப்பு முனையாக கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்