நடிகை மெஹரீன் பிர்சதா பவ்யா பிஷ்னோவை காதலித்து வந்தார். இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் ஆவார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தனது திருமணத்தை நிறுத்துவதாக நேற்று அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பதிவிட்டிருந்த அவர் “நானும், பவ்யா பிஷ்னோவும் திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம். இது இருவரின் நலன் கருதி நாங்கள் எடுத்த முடிவு. இனி பவ்யாவுடனும், அவரது குடும்ப உறுப்பினர்களுடனும் எந்த தொடர்பும் இல்லை. இது எங்களின் தனிப்பட்ட விஷயம் என்பதால், இதை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி தனது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
நடிகை மெஹரீன் தனது திருமணத்தைத் தள்ளிவைத்துவிட்டு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தத் துவங்கினார். எனவே பவ்யா குடும்பத்தினர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பைக் கைவிடுமாறு கூறினராம். ஆனால் மெஹரீன் நடிப்பதில் உறுதியாக இருந்துள்ளார். இது அவர்களுக்கு பிடிக்கவில்லையாம். எனவேதான் இதுசரிப்பட்டு வராது என்று திருமணத்திற்கு முன்பே உறவை முறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது மெஹரீன் மீண்டும் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இவர் தமிழில் தனுஷ் உடன் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.