சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வெள்ளை யானை’. மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் உள்ளன. இதனால், இந்தப் படத்தை நேரடியாக ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் சன் டிவி நிறுவனம் படக்குழுவினரிடம் பேசி, நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்புக்குக் கைப்பற்றியுள்ளது. அதற்குப் பிறகு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
வருகிற ஜூலை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியாகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1