29.5 C
Jaffna
April 19, 2024
லைவ் ஸ்டைல்

நரை முடி பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு தரும் சில வீட்டு வைத்தியங்கள்!

இப்போதெல்லாம் வெள்ளை முடி பிரச்சினை பொதுவானதாகி வருகிறது. குழந்தைகள் மத்தியில் கூட இந்த பிரச்சினை வேகமாக அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். துரித உணவு, தவறான வாழ்க்கை முறை, ரசாயனம் கலந்த ஷாம்பு போன்றவற்றின் பயன்பாடு முடி நரைக்க காரணமாகிறது. வெள்ளை முடி பிரச்சனையால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சில வீட்டு வைத்தியங்கள் உதவியுடன் முடி நரைக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மிகவும் பிரபலமான ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி இது குறித்து கூறுகையில், சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்படுவதன் காரணமாக, ஒருவர் மனதளவில் பாதிக்கப்படுகிறார். மற்றவர்களுடன் பழகுவதில் தயக்கமும் உள்ளது. வெள்ளை முடியின் பிரச்சனையிலிருந்து விடுபட, சில எளிய உள்ளன என்கிறார்

1. தேங்காய் எண்ணெய் மற்றும் மருதாணி இலை

டாக்டர் அப்ரார் முல்தானி பரிந்துரைக்கும் ஒரு எண்ணைய் கலவயை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும், தேங்காய் எண்ணெய் மற்றும் மருதாணி வெள்ளை முடியை அகற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மருதாணி முடியின் வேர்களை அடைய வேர்களுக்கு அடைய தேங்காய் எண்ணெய் உதவியாக இருக்கும்.

இந்த கலவைக்கு 3-4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதில் ஒரு மருதாணி இலைகளை போடவும்.
எண்ணெய் நிறம் மாறும் வரை சூடாக்கி, பின்னர் எண்ணெயை குளிர்ந்த உடன், முடியின் வேர்களில் தடவவும்.
குறைந்தது 40 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டுவிட்டு கழுவவும். இந்த செயல்முறையை தவறாமல் பின்பற்றுவதன் மூலம், முடி கருப்பு நிறமாக மாறும்.

2. தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய்

தேங்காய் எண்ணெய் மற்றும் அம்லா ஆகியவை முடியை கருமையாக்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் வைட்டமின் சி இருப்பதால் முடியை கருமையாக்கும் கொலாஜனை அதிகரிக்கும் திறன் அம்லாவுக்கு உள்ளது. முடி வளர்ச்சிக்கும் இது அவசியம்.

இதற்காக தேங்காய் எண்ணெயில் 3 டீஸ்பூன் நெல்லிகாய் தூளை 2 டீஸ்பூன் கலக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது சூடாக்கவும். பின்னர் எண்ணெய் குளிர்ந்ததும், முடியின் வேர்களில் இருந்து இந்த எண்னெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இதை ஒரே இரவில் விட்டுவிட்டு காலையில் ஷாம்பு போட்டு கழுவவும்.

3. ஆமணக்கு மற்றும் கடுகு எண்ணெய்

ஆமணக்கு மற்றும் ஆலிவ் எண்ணெயும் முடி கருமையாவதற்கு நன்மை பயக்கும். ஆமணக்கு எண்ணெயில் நல்ல அளவு புரதம் உள்ளது, இது முடி உடைவதைத் தடுக்கிறது. மறுபுறம், கடுகு எண்ணெயில் இரும்பு, மெக்னீசியம், செலினியம், துத்தநாகம் மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளன, இது முடியை ஆரோக்கியமாக வைக்கும். அதன் ஊட்டச்சத்து காரணமாக, முடி கறுப்பாக இருக்கும்.

முதலில், 1 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெயை 2 டீஸ்பூன் கடுகு எண்ணெயில் கலந்து சில நொடிகள் சூடாக்கவும். எண்ணெய் குளிர்ந்த பிறகு, முடியின் வேர்களில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
குறைந்தது 45 நிமிடங்களுக்கு அதை விட்டுவிட்டு, பின்னர் ஷாம்பூவுடன் கழுவ வேண்டும்.
வாரத்திற்கு 3 முறையாவது செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment