மேற்கு வங்கத்தில் இறந்து போன நாய்க்கு இரங்கல் கூட்டம் நடந்துள்ளது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்.
மேற்கு வங்க மாநிலம் பிர்பம் என்ற பகுதிக்குள் சின்பை என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிளை அலுவலகம் ஒன்று உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்திற்கு ஒரு சிறிய
நாய் குட்டி ஒன்று வந்தது. மற்ற தெருநாய்கள் எல்லாம் அடித்து துரத்தியதால் வேறு வழியில்லாமல் எங்கு செல்வது என தெரியாமல் எதர்ச்சியாக இந்த அலுவலகம் பக்கம் வந்தது. இதை பார்த்ததும் அந்த அலுவலகத்திலிருந்து சூப்பர் வைசர் அதற்கு உணவளித்தார். அன்று முதல் அந்த நாய் அந்த அலுவலகத்திலேயே தங்க துவங்கியது.
தினமும் அந்த அலுவலகத்திற்கு வருபவர்கள் அவர்களால் முடிந்த சாப்பாட்டை அந்த நாய்க்கு கொண்டு வருவார்கள். அதுவும் நன்றியுடன் அதை சாப்பிட்டு வந்தது. சுமார் 10 ஆண்டுகளாக அந்த நாய் அந்த அலுவலகத்திலேயே நன்றியுடன் இருந்தது. அதற்கு “டாமி” என பெயர் வைத்தனர். இந்நிலையில் வயதான காரணத்தால் அந்த நாய்க்கு கண் சரியாக தெரியவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் 28ம் தேதி இந்த நாய் அப்பகுதி வழியாக சென்ற ஒரு லாரி சென்றபோது அதில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து அந்த நாயை அப்பகுதியிலிருந்தவர்கள் அடக்கம் செய்தனர்.
அதன் பின்னர் அந்த நாயிற்கான இரங்கல் கூட்டம் அந்த கட்சி அலுவலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்திற்காக 50 பேர் அழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து டாமியுடன் அவர்கள் அனுபவம் குறித்து பேசினர். பலருக்கு டாமியுடன் நெருங்கியு உறவு இருந்தது அதன் பின்னர் தான் பலருக்கு தெரியவந்தது. இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.