முகம் பள பளன்னு ஜொலிக்க வெள்ளரிக்காய்!

Date:

வெள்ளரிக்காய் பற்றி ஏற்கனவே ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்க நிறைய வாய்ப்பு உள்ளது. கோடை காலத்தில் வெள்ளரிக்காய் சுலபமாக கிடைக்கும். அதுவும் மலிவான விலையில் இதனை நாம் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு பல நன்மைகள் உண்டு. வெள்ளரிக்காயில் 94 சதவீதம் தண்ணீர் என்ற போதிலும் இதன் சத்திற்கு குறைவில்லை.

இது செரிமான மண்டத்திற்கு புத்துணர்ச்சி அளித்து இதமான தன்மையை கொடுக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது. இதனை பெரும்பாலும் சாலட், சான்டுவிச்களில் பயன்படுத்துவர். இது போக வெள்ளரிக்காய்கு அழகு சார்ந்த பயன்களும் உண்டு. வைட்டமின் K மற்றும் C நிறைந்த வெள்ளரிக்காய் நம்மை அழகாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் இதில் உள்ள மாங்கனீஸ் மற்றும் பீட்டா கரோட்டின் சருமத்திற்கு ஆற்றும் தன்மையை அளிக்கிறது. இதனை ஒரு கிலன்சராகவும் மாய்ஷரைசராகவும் பயன்படுத்தலாம். முகத்தின் கருமையை போக்கி நிறத்தை மேம்படுத்துகிறது. வெள்ளரிக்காயை பிற இயற்கை பொருட்களான தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். இப்போது உங்கள் அழகை மேம்படுத்த வெள்ளரிக்காயை பயன்படுத்தும் முறை குறித்து பார்ப்போம்.

கண்களுக்கு கீழ் காணப்படும் கருவளையங்களுக்கு சிறந்த மருந்து வெள்ளரிக்காய். இதனை வெட்டி கண்களில் வைத்து கொள்ளும் போது குளிர்ச்சியை அளித்து கருமையை போக்கி கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

வெள்ளரிக்காய் சாறு அல்லது அதனை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தின் கருமை மாறி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வெள்ளரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் உள்வீக்கத்தை குறைத்து பருக்கள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை நீக்குகிறது.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த வெள்ளரிக்காய் சருமத்தை இருகச் செய்து சுருக்கங்களை போக்கி வயதான தோற்றத்தை மாற்றுகிறது.

சூரிய கதிர்களால் ஏற்படும் டேனை போக்கி ஒரு இயற்கை பிலீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது. முகத்தில் உள்ள தழும்புகளை மறையச் செய்கிறது.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்