லைவ் ஸ்டைல்

மணத்தக்காளி கீரை சட்னி

வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை – 2 பிடி

மிளகு – ¼ டீஸ்பூன்
சீரகம் – ¼ டீஸ்பூன்
பச்சை மிளகாய் -1 (விரும்பினால்)
சின்ன வெங்காயம் – 10
தேங்காய்த் துருவல் – கால் கப்
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்

செய்முறை

மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் எடுத்து கொள்ளவும்.

கீரையை சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம் மாறாது அவித்து எடுங்கள்.

மிக்சியில் வதக்கிய கீரை, மிளகு, சீரகம், தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், ப.மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சூப்பரான மணத்தக்காளி கீரை சட்னி ரெடி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

விரைவில் மாதவிடாய் வரவைப்பதும் தாமதப்படுத்துவது எப்படி?

divya divya

புற்றுநோய் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

divya divya

இதெல்லாம் சாப்பிட்டால் முகப்பரு அதிகமா வருமாம்;கவனமா இருங்க!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!