லண்டன் அரண்மனையில் இளவரசி டயானாவுக்கு சிலையை திறந்து வைத்த இளவரசர்கள்

Date:

ரிட்டிஷ் இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, லண்டன் அரண்மனை தோட்டத்தில் அவருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்டவர் பிரிட்டிஷ் இளவரசி டயானா. இளவரசர் சார்லசை காதலித்து திருமணம் செய்த அவர், ராஜ குடும்பத்தின் உறுப்பினராக ஆனபோதும், தனது நிலையில் இருந்து மாறாமல் இருந்தார். அரச குடும்பத்தினர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மரபுகளை புறந்தள்ளிய டயானா, தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

டயானா கார் விபத்தில் இறந்து 23 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம், ஹாரி இருவரும் தாயாரின் மீதான பாசத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, லண்டன் அரண்மனை தோட்டத்தில் அவருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் சிலையை திறந்து வைத்தனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்