உ.பி மாநிலத்தைச் சேர்ந்த லால் பிகாரி என்பவர் மரணமடைந்துவிட்டதாக சட்டப்படி வழங்கப்பட்ட சான்றிதழால் தன் சொத்தை இழந்தவர் இதன் பின்னர் அவர் மறுபிறவி எடுத்தாக கோர்ட் சான்று அளித்தது. அதன் பின்னர் தற்போது 27 ஆண்டுகள் கழித்து தன் மனைவியை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
உ.பி மாநிலத்தைச் சேர்ந்த லால் பிகாரி என்பவர் மரணமடைந்துவிட்டதாக சட்டப்படி வழங்கப்பட்ட சான்றிதழால் தன் சொத்தை இழந்தவர் இதன் பின்னர் அவர் மறுபிறவி எடுத்தாக கோர்ட் சான்று அளித்தது. அதன் பின்னர் தற்போது 27 ஆண்டுகள் கழித்து தன் மனைவியை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அது பற்றி முழுமையாக கீழே காணலாம் வாருங்கள்
பின்னர் இத எப்படி நடந்தது என அவர் விசாரித்த போது அவரது மாமா இவரது நிலத்தை இவரிடமிருந்து அபரிக்க இப்படி ஒரு போலியான ஆணவத்தை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோர்ட்டிற்கு சென்று தான் உயிருடன் தான் இருப்பதாகவும், தன் நிலத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படியும் கோரினார். கோர்ட்டில் வழக்கு நடந்தது
இவர் எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லை. கோர்ட் லால் பிகாரியிடம் அவர் தான் லால் பிகாரி என்பதற்கு பல ஆவணங்களை கேட்டது. இதனால் வழக்கு இழுத்துக்கொண்டே சென்றது. இந்நிலையில் தான் இறந்துவிட்டதாக ஒரு நிமிடத்தில் ஆவணத்தை தயார் செய்ய முடிந்த அரசிற்கு தான் கண்முன்னே உயிருடன் இருந்தும் இவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆவணம் செய்ய முடியவில்லை என வேதனையடைந்தார். இதையடுத்து அவர் பல்வேறு விதமாகதான் உயிருடன் தான் இருப்பதை மக்களுக்கு காட்ட விருப்பினார்.
இதனால் இவர் தனக்கு தானே முதலில் இறுதி ஊர்வலம் நடத்தினார். பின்னர் தான் அரசு ஆணவங்கள் படி இருந்துவிட்டேன் அல்லவா தன் மனைவிக்கு விதவை பென்சன் தாருங்கள் என மனுஅளித்தார். இதன் பின்னர் இவர் 1980களில் தன் பெயருக்கு பின்னால் ஹிந்தி மொழியில் “மரிதாக்” (அதர்த்தம் : மரித்தவர்) என அடைமொழி வைத்துக்கொண்டார். தான் உயிருடன் தான் இருக்கிறேன் என்பதை காட்ட எல்லாவற்றிக்கும் ஒரு படி மேலே போய் 1988ம் ஆண்டு தேர்தலில் ராஜீவ் காந்திக்கு எதிராக தேர்தலில் வேட்பாளராக நின்று தான் இன்னும்உயிருடன் தான் இருக்கிறேன் என வெளி உலகிற்கு சொன்னார்
1994ம் ஆண்டு இவர் வழக்கை விசாரித்த கோர்ட் இறந்ததாக பதிவு செய்யப்பட்ட இவரை மீண்டும் உயிருடன் இருப்பதாக மாற்ற சட்டத்தில் இடமில்லை அதனால் அவர் இறந்ததாகவே இருக்கட்டும் தற்போது இவருக்கு உயிருடன் இருப்பதாக வேறு சான்றிதழ் வழங்கப்படி கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி தற்போது அவர் மீண்டும் 1994ல் உயிர் உள்ளவாராக மாறினார். கிட்டத்தட்ட தான் உயிருடன் தான் இருக்கிறேன் என அவர் 19 ஆண்டு காலம் சட்டரீதியாக போராடினார்.
இதற்கிடையில் இவ்வாறு சொத்துக்காக மரணமடைந்துவிட்டாதாக சான்றழிக்கப்பட்டவர்களுக்கான இறந்தவர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கினார். இந்த சங்கத்தில் 2004ம் ஆண்டு வரை சுமார் 20 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர். அதில் 4 பேர் உயிருடன் இருப்தாக கோர்ட் மூலம் தீர்பளிக்கப்பட்டனர்.
இந்நிலையில் லால் பிகாரிக்கு உயிருடன் இருப்பதாக சான்று வழங்கி 27 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் அவர் அரசு சட்டப்படி 27 வயதாகும்இளைஞர் என்பதால் அவர் தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருவது தற்போது வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டு இந்த திருமணம் நடக்கவுள்ளதாகவும். தான் இறந்து மீண்டும் பிறந்ததால் மீண்டும் தன் மனைவியையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.