நடிகர் சிம்பு வீட்டில் பன்னீர் சமைக்கும் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு தற்போது உடலை குறைத்து மிகவும் பிட்டாக மாறியுள்ளார். எனவே தீவிரமாக டயட்டையும் கடைபிடித்து வருகிறார். தற்போதெல்லாம் சிம்பு கேமராவுக்கு பின் செய்யும் சிறுசிறு விஷயங்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு நாய்குட்டியுடன் சிம்பு உரையாடல் நடத்திய வீடியோ இணையத்தைக் கலக்கியது. தற்போது சிம்பு தனது வீட்டில் வீட்டில் பன்னீர் காளான் சமைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் சிக்கனிலிருந்து பன்னீருக்கு மாற்றியுள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் மாநாடு திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து சிம்பு ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பின்னர் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளில் நீராடும் சூரியன்’ படத்திலும் நடிக்க உள்ளார்.