அட்லி பாலிவுட்டில் இயக்கும் படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, வெற்றி இயக்குனராக தமிழ் திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தற்போது இவரின் மார்க்கெட் பாலிவுட் வரை சென்றுக்கொண்டிருக்கிறது. விஜய்யை வைத்து இவர் இயக்கிய ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.
தமிழில் படங்களை இயக்கி வந்த அட்லி, தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். பெயரிடப்படாத இப்படத்தின் முதற்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லி இயக்கும் இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘பதான்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘பதான்’ படம் முடியும் தருவாயில் உள்ளதால் வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை துவங்க அட்லி திட்டமிட்டுள்ளார்.
அட்லி படம் என்றாலே வேறொரு படத்தின் காப்பி என கூறப்படுகிறது. இந்த படமும் ஒரு படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய்காந்தின் சத்ரியன் படத்தைதான் ‘தெறி’ என்ற பெயரில் அட்லி எடுத்தார் என்று பேசப்பட்டது. அதேபோன்று விஜய்காந்தின் பேரரசு படத்தின் கதையைதான் தற்போது ஷாருக்கான் படமாக எடுக்கவுள்ளார் அட்லி என்று கிசுகிசுக்கப்படுகிறது.