இனி கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் : மத்திய சுகாதாரத்துறை அனுமதி

Date:

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதியளிக்கப்படாமல் இருந்து வந்தது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு சோர்வு அல்லது பக்கவிளைவுகள் ஏற்படாது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வு நடத்தி கூறியிருந்தனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை இன்று அனுமதியளித்துள்ளது. மேலும், தடுப்பூசி போடுவதற்கு கோவின் தளத்தில் முன்பதிவ செய்த பிறகு, அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்