வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் தற்கொலைக்கு முயற்சித்த நபர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தினை சேர்ந்த 63 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த நபர் நேற்று (01) மாலை தற்கொலை முயற்சிக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1