கம்பஹா மாவட்டத்தில் இருந்து நேற்று 300 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் நேற்று 1,883 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை இலங்கையில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 260,972 ஆக அதிகரித்துள்ளது.
COVID-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம்ம் வெளியிட்ட தகவல்படி,
கம்பஹா மாவட்டத்தில் 342 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 247 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 220 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 117 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 104 பேரும், காலி மாவட்டத்தில் 85 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 81 பேரும், கேகாலை மாவட்டத்தில் 79 பேரும், பொலன்னருவை மாவட்டத்தில் 73 பேரும், குருநாகல் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தலா 67 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 54 பேரும், அம்பாரை மாவட்டத்தில் 45 பேரும், கண்டி மாவட்டத்தில் 43 பேரும், அனுராதபுரம் மற்றும் பதுல்ளை மாவட்டங்களில் தலா 42 பேரும், மன்னார் மாவட்டத்தில் 29 பேரும், வவுனியா மாவட்டத்தில் 16 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 15 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 13 பேரும், ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 8 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 4 பேரும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 68 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.