‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு முடிந்தது ; ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு திரும்பிய தனுஷ்..

Date:

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘டி 43’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் தனுஷ், 4 மாதங்கள் அங்கு தங்கியிருந்து அப்படத்தில் நடித்து முடித்தார். இதையடுத்து அமெரிக்காவில் சில நாட்கள் ஓய்வெடுத்த நடிகர் தனுஷ், தற்போது இந்தியா திரும்பி உள்ளார்.

அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஐதராபாத் வந்தடைந்த அவர், கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி 43’ படத்தின் படப்பிடிப்பில் விரைவில் பங்கேற்க உள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் ‘டி 43’ படத்தில் நடித்து முடித்த பின் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்