12வயது முதல் 18 வயதுவரை உள்ள சிறுவர்களுக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி ஜைடஸ் கெடிலா நிறுவனம் மத்தியஅரசிடம் மனு வழங்கி உள்ளது.
இந்தியாவில் தற்போது வரையில், கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமின்றி, ஸ்புட்னிக், மாடர்னா தடுப்பூசி பயன்பாட்டுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில், 3 டோஸ் கொண்ட, ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிஜிசிஐ) அனுமதி கோரியுள்ளது.
ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் தான் கண்டுபிடித்த ஜைகோவ்-டி(ZyCoV-D) மருந்தை 12வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசரப் பயன்பாட்டுக்கு பயன் படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பூசி நிறுவனம், 3-கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்து ‘விட்ட நிலையில், அதற்கான ஆய்வு முடிவுகளுடன் அரசிடம் அனுமதியை கோரியுள்ளது.
இந்த தடுப்பூசியைக்கொண்டு 28ஆயிரம் பேரிடம் 3வது கிளினிக்கல் பரிசோதனையை ஜைடஸ் கெடிலா நிறுவனம் நடத்தியுள்ளது. ஆய்வு முடிவி, ஜைகோவ்-டி தடுப்பூசியின் பாதுகாப்பும், உருமாற்றம் அடைந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறனும் சிறப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த தடுப்பூசியானது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், நீடில்லெஸ் தொழில்நுட்பத்தில், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில்(hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28வது நாளில் 2-வது டோஸும், 56-வது நாளில் 3-வது டோஸ் செலுத்த வேண்டும்.நீடில்லெஸ் தொழில்நுட்பத்தில்இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
மத்தியஅரசு அனுமதி வழங்கினால், ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி தடுப்பூசியை தயாரிக்க முடியும் என கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.