புது சீரியல் ரெடி- நடிகர் சஞ்சீவ்!

Date:

ராஜா ராணி சீரியல் புகழ் நடிகர் சஞ்சீவ் கடைசியாக விஜய் டிவியின் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. அதற்கு பிறகு சஞ்சீவ் வேறு சீரியல்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

சஞ்சீவின் மனைவி ஆல்யா மானசா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு ஜோடியாக சித்து நடிக்கிறார். சஞ்சீவ் எப்போது புது சீரியலில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் சஞ்சீவ் தற்போது ஒரு புது ப்ராஜக்ட்டில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அது என்ன சீரியல் என்பது பற்றி அறிவிப்பை விரைவில் வெளியிடப்போவதாக சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். தனக்கு ஒரு மில்லியன் followers கிடைக்கும்போது அந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தற்போது சஞ்சீவுக்கு 9.86 லட்சம் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் 1 மில்லியன் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால அவரது புது சீரியல் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் வரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்