37 ஆண்டுகளாக மூக்கில் விளையாட்டு பொருளுடன் சுற்றிய பெண்… கொரோனா சோதனையில் வெளியான உண்மை!

Date:

இங்கிலாந்தை சேர்ந்த பெண் மேரி மேக்கார்த்தி, 45 வயதான இவர் பல ஆண்டுகளாக சைனஸ் பிரச்சனையில் இருந்துவந்துள்ளார். அதாவது இவரது இடது மூக்கு வழியாக மூச்சுவிட கடுமையான சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் தனது மூச்சு விடும் பிரச்சனைக்கு பலன் இல்லை. இருந்தாலும் அது பெரிய பிரச்சனையாக இல்லாததால் அவர் அதை சரியாக கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கொரோனா பரிசோதனைக்காக ஸ்வாப் டெஸ்ட் எடுத்துள்ளார். அதில் அவது இடது மூக்கில் ஸ்வாப் ஸ்டிக்கை உள்ளே விட்டு சாம்பிள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மேரிக்கு தன் மூக்கில் தாங்க முடியாத வலியும் மூச்சு விட பெரும் சிரமாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் டாக்டரிடம் உடனே சென்றார். டாக்டர்கள் அவரது மூக்கை ஸ்கேன் செய்து பார்த்தால் தான் தெரியும் என சொல்லிவிட்டனர்.

அதன் பின்னர் ஸ்கேன் செய்த போது அவரது மூக்கில் ஏதோ வித்தியாசமான வட்ட வடிவிலான பொருள் ஒன்று இருந்தது தெரியவந்தது. அந்த பொருள் தான் இவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதை அறிந்த டாக்டர்கள் மேரிக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த பொருளை வெளியே எடுத்த போது தான் தெரிந்தது. அது அந்நாட்டில் போர்டு கேம்களில் பயன்படுத்தப்படும் காயின் என்று. நம்மூரில் தாயகட்டை, பாம்புகட்டம் விளையாடும் போது ஒரு பிளாஸ்டிக் காயினை பயன்படுத்துவோம் அல்லவா அப்படி ஒரு காயின் தான் அது.

அது எப்படி அவரது மூக்கிற்குள் சென்றது என விசாரிக்கும் போது தான் மேரிக்கு தன் சிறு வயது நினைவி ஒன்று வந்தது. சிறு வயதில் மேரியும் அவரது சகோதரர்களும் இந்த ரக காயின்களை தன் மூக்கிற்குள் விட்டு அதை மூக்கு வழியாக காற்றின் மூலம் வெளியே தள்ளி விளையாடி வந்துள்ளனர். இப்படியாக விளையாடும் போது ஒருமுறை அந்த காயினை மேரி மூக்கிற்குள் உள்ளே இழுந்துள்ளார் காயின் வெளியே வரவேயில்லை. இதை தன் தாயிடம் சொல்ல பயந்த மேரி அப்படியே விட்டுள்ளார். அதன் பின்னர் அவருக்கு மூச்சு விடுவதில் எந்த சிரமமும் இல்லாததால் அதை அப்படியே மறந்துவிட்டார். சில நேரங்களில் அந்த காயின் எங்கேபோனது என சிறு வயதில் யோசித்துள்ளார். அன்றைய வயதில் அதை பற்றி யோசிக்கும் அளவிற்கு அவர் வளராததால் அது அப்படியே மூக்கிற்குள்ளேயே சிக்கிக்கொண்டது.

அதாவது மேரிக்கு 8 வயதில் தன் மூக்கிற்குள் சிக்கிய அந்த காயின் 37 ஆண்டுகள் கழித்து அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. 37 ஆண்டுகள் அந்த காயின் அவரது மூக்கிற்குள்ளேயே இருந்துள்ளது. தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்