ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ திரைப்படம் டீசர் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் மஹா திரைப்படம் உருவாகியுள்ளது. இது ஹன்சிகாவின் 50 வது படமாக உருவாகியுள்ளது. சிம்பு இந்தப் படத்தில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகர் ஶ்ரீகாந்த்தும் இப்படத்தில் நடித்துள்ளார். Etcetera Entertainment நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இப்படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மஹா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
தற்போது இந்தப் படத்தின் டீசர் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தயாராகுங்கள் மக்களே, மஹா டீசர் ஜூலை 2-ம் திகதி வரவிருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள். கண்டிப்பாக தவறவிடாதீர்கள்” என்று அறிவித்துள்ளனர்.
தற்போது ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. எப்போது அவை மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை. எனவே மஹா திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எந்த ஓடிடி தளம், எப்போது ரிலீஸ் ஆகும் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.