26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
குற்றம்

சிறுவர்களை துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெண் கைது!

கண்டி பஹிரவகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள இனிப்பு தின்பண்ட உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் குறித்த நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி கெடவல விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான அரச தொழில் பயிற்சி நிறுவனத்தினால் குறித்த சிறுவன் உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களை வீடுகளுக்கு செல்ல விடாமல் நாளாந்தம் கொடூரமாக தாக்கி பணியில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர், தனது பாலியல் ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக சிறுவர்களை பலவந்தப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு இணங்காத சிறுவர்களை கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மேலும் இரண்டு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற சிறுவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய நிறுவனத்தில் இருந்த மற்றைய சிறுவனின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கண்டி பொலிஸார் குறித்த இடத்தை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, மீட்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்ட 41 வயதுடைய பெண்ணுக்கு மேலதிகமாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சிறுவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்துள்ளார். அவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு எதிராக பெண் துஸ்பிரயோக வழக்கு ஒன்று தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

கடன் தொல்லையால் இளம் தம்பதி விபரீத முடிவு: காட்டுக்குள் அருகருகாக சடலங்களாக மீட்பு!

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியைக்கு விளக்கமறியல்!

Pagetamil

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

Leave a Comment