26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
உலகம்

உலகின் மிகச் சிறிய ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா?

இந்த உலகில் 5 ஸ்டார் ஹோட்டல், 3 ஸ்டார் ஹோட்டல் என நீங்கள் பல விதமான ஹோட்டல்களை கேள்விபட்டிருப்பீர்கள். ஏழைகளுக்கான சிறிய ஹோட்டல்கள் முதல் பெரும் பணக்காரர்களுக்கான மிகப்பெரிய ஹோட்டல்கள் வரை இந்த உலகில் பல தரப்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. ஆனால் உலகிலேயே சிறிய ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா? இதை பற்றி தெரிந்தால் ஆச்சரிப்படுவீர்கள்

​மினி ஹோட்டல்

உலகின் மிகச்சிறிய ஹோட்டலை “மினி ஹோட்டல்” என அழைக்கிறார்கள். இந்த மினி ஹோட்டல் ஒரு கட்டிடம் அல்ல ஒரு சிறிய காரை ஓட்டலாக மாற்றியுள்ளனர். இந்த ஓட்டல் அரபு நாடான ஜோர்டனில் இருக்கிறது. இதை அந்நாட்டைச் சேர்ந்த முகம்மது அல்-மல்லாஹிம் என்பவர் நடத்தி வருகிறார். அவர்து தனது போக்ஸ்வாகன் பீட்டில் காரை ஓட்டலாக மாற்றியுள்ளார். இதுதான் உலகத்தின் மிகச்சிறிய ஹோட்டலாம்.

​கட்டணம்

இந்த ஹோட்டலில் இருக்கும் ஒரே பிரச்சனை இந்த ஓட்டலில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே தங்க முடியும். அதனால் இது தம்பதிகளாக தங்குபவர்கள் ஹனிமூன் செல்பவர்களுக்கு சிறந்த ஓட்டல், இந் ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு 56 டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ 4 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

​காத்திருப்பு

இந்த ஹோட்டலில் தங்க நீங்கள் நினைத்த நேரத்திற்கு எல்லாம் செல்ல முடியாது. இதற்காக ஆன்லைன் புக்கிங் நடந்து வருகிறது. இந்த ஹோட்டலில்தங்க நீண்ட வரிசையில் பலர் காத்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஓட்டலில் தங்குவதற்காகவே இந்த ஊருக்கு டூர் வருகிறார்கள். இந்த ஓட்டலில்தங்குவதற்கு பலர் மாத கணக்கில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வசதி

இந்த ஹோட்டலில் உள்ள மெத்தைகள் தலையனைகள் எல்லாம் கையால் எம்பராய்டரி போடப்பட்ட துணிகளால் செய்யப்பட்டுள்ளது. அந்த ஹோட்டலில்தங்குபவர்களுக்கு அந்நாட்டின் பானம் மற்றும் நொறுக்கு தீனிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஹோட்டல் இருக்கும் பகுதிக்கு அருகே ஒரு குகை இருக்கிறதாம். அங்கும் சிலர் வந்து தங்கி செல்கின்றனர்.

கனவு

இந்த “மினி ஹோட்டல்” ஜோர்டன் நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது. இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இந்த ஹோட்டலை பற்றி தெரியுமாம். இந்த ஓட்டலின் உரிமையாளர் முகம்மது அல் – மாலாஹிம் இந்த ஹோட்டல் போன்ற ஒன்றை திறக்கவேண்டும் என நீண்டநாள் கனவு கண்டு இதை செய்துள்ளாராம். இந்த ஹோட்டலுக்கு 365 நாட்களும் புக்கிங் வந்து கொண்டே தான் இருக்குமாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரஷ்ய அணுசக்தி படைகளின் தளபதி குண்டுவெடிப்பில் பலி

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஈரானின் ஏவுகணை எரிபொருள் உற்பத்தியை குறைத்த இஸ்ரேல் தாக்குதல்

Pagetamil

Leave a Comment