வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் பாவனைக்குதவாத வகையில் கொண்டு சென்ற 2000 கிலோ கோழி இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
வட பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த வாகனத்தில் போதியளவு குளிரூட்டி இன்மையால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த நபரையும், வாகனத்தினையும், பாவனைக்குதவாத நிலையில் கைப்பற்றிய இறைச்சியையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களோடு பாவனைக்கு உதவாத வகையில் இறைச்சியை கொண்டு சென்றவர்கள் முரண்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.