வேலைவாய்ப்பு, செல்வம், திருமண வாழ்க்கை, புத்திரப்பேறு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்களில் பாதகங்கள் நீங்கி மேன்மையான நிலையை பெறுவதற்கும் இந்த கிரக சாந்தி பூஜை செய்யலாம்.
குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் கிரக சாந்தி பூஜை
குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் கிரக சாந்தி பூஜை
மனிதர்களுக்கு அவர்களின் கர்மவினைக்கு ஏற்ப நவகிரகங்களும் பாதகமான பலன்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுத்து வாழ்வில் மேலான நிலையை அடைய கூறப்பட்ட ஒரு வழிமுறைதான் கிரக சாந்தி பூஜையாகும்.
ஜாதகத்தில் கிரகங்களின் பாதகமான கோத்திரங்கள் திசா புக்தி காலங்கள் நடப்பவர்களும், வாழ்வில் கல்வி, வேலைவாய்ப்பு, செல்வம், திருமண வாழ்க்கை, புத்திரப்பேறு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல விடயங்களில் பாதகங்கள் நீங்கி மேன்மையான நிலையை பெறுவதற்கும் இந்த கிரக சாந்தி பூஜை செய்யலாம்.
கிரக சாந்தி பூஜையை செய்வதற்கு ஹோம பூஜைகள் செய்வதில் அனுபவம் பெற்ற வேதியர்களிடம் ஒரு நல்ல நாளை குறித்து கொள்ள வேண்டும். உங்கள் பிறந்த நட்சத்திர தினம் அல்லது ஏதேனும் சுப முகூர்த்த தினங்களில் இந்த சாந்தி பூஜையை செய்வது மிகவும் சிறப்பானது. இந்த பூஜையை உங்கள் வீட்டிலேயே அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். இந்த பூஜையில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வது நல்லது. அப்படி செய்வதால் அனைவருக்கும் வாழ்வில் அற்புதமான பலன்கள் உண்டாகும்.
கிரக சாந்தி பூஜை செய்கின்ற குடும்பத்தின் தலைவரும், அவரின் வாழ்க்கை துணையும் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது இந்த கிரக சாந்தி பூஜையின் பலன் பன்மடங்காக கிடைக்கும். கிரக சாந்தி பூஜைக்கான பொருட்கள் அனைத்தும் வேதியர்களுக்கு வழங்கப்பட்ட பின் நல்ல முகூர்த்த நேரத்தில், ஹோமம் வளர்த்து வேதியர்கள் நவகிரக மந்திரங்களை துதித்து, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் பாவங்களும் நீங்கும் வகையில் ஹோம பூஜைகள் செய்வர். பூஜையின்போது குடும்பத்தலைவர் வேதியர்கள் அறிவுறுத்தும் வகையில் மாவிலைகள், மலர்கள் அரிசி மற்றும் நவ தானியங்கள் போன்றவற்றை ஹோமத் தீயில் இட்டு நவக்கிரகங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.