அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் ஓடும் விமானத்தில் இருந்து குதித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச விமான நிலையத்தில் (27.06.2021) இரவு சுமார் 7 மணிக்கு சால்ட் லேக் நகரத்துக்கு விமானம் ஒன்று கிளம்பியது. அந்த விமானம் நகரத் தொடங்கியதும் ஒரு பயணி திடீரென எழுந்து விமான ஓட்டிகளின் அறையான காக்பிட் என்னும் இடத்துக்குச் செல்ல முயன்றுள்ளார்.
அவர் எப்படியோ சர்வீஸ் கதவை திறந்து அவசர பாதையில் சென்று ஓடும் விமானத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். அதன் பிறகு அவர் வெளியே ஓடி டாக்சியில் ஏறி தப்ப முயன்றுள்ளார். ஆனால் விஷயம் அறிந்த விமான நிலைய அதிகாரிகள் அந்த நபரை விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர்.
அந்த நபர் விமானத்தில் இருந்து குதிக்கும் போது கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் குதித்ததற்கான காரணம் தெரியவில்லை. இதனால் விமானம் 3 மணிக்கும் மேல் தாமதமாக புறப்பட்டுள்ளது.